முத்தமிழாதிபன், இரட்டைவாளுக்கு அதிபதி பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் குலதெய்வமான வீரசக்க தேவி ஆலயம் கட்டபொம்மன் காலத்தில் சகலங்களை காக்கும் சகாதேவி என்றும், அதன் பிறகு காலபோக்கில் ஜக்க தேவி என்றும் சக்கம்மாள், சக்கதேவி பின்னர் வீர சக்கதேவி என்றும் இன்றளவும் அழைக்கப்பட்டு வருகிறது.
சகா என்றால் வாள் என்றும் அர்த்தம் கட்டபொம்மன் என்ற பெயரில் கூட கட்ட என்றால் வாள் என்றும் அர்த்தம். வீரத்தை பறைசாற்றும் வீதமாக வீரவாளை இன்றளவும் வழிபட்டு வருகின்றனர்.
இரட்டைவாளுக்கு அதிபதியான வீரபாண்டிய கட்டபொம்மன் இஷ்டம் தெய்வமான தமிழ் கடவுள் முருகனை பாஞ்சாலங்குறிச்சியில் இருந்து திருச்செந்தூர் வரை வழி நெடுக மணிமண்டபங்கள் அமைத்து திருச்செந்தூரில் முருகன் பூஜை நடக்கும் நேரத்தில் வழி நெடுக மணி ஒசை எழுப்பி பாஞ்சாலங்குறிச்சி முருகன் கோவிலில் வழிபடுவதை வழக்கமாக கொண் டிருந்தனர். ஆங்கிலேயர்களால் கோட்டை இடிக்கப்படும் போது முருகன் கோவிலும் இடிக்கப்பட்டது. இன்றளவு கூட முருகன் கோவில் இடிக்கப்பட்ட இடத்தில் எச்சங்களை காணலாம். திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு கட்டபொம்மன் முன்னோர்கள் வழங்கிய நன்கொடைகள் திருப்பணிகள் , தங்க நகைகள், நிலங்கள் ஏராளம் இன்றளவும் கூட திருச்செந்தூர் முருகன் கோவில் கோபுர உச்சியில் வெண்கல ஆலய மணி 7 வது தளத்தில் கட்ட பொம்மன் அவர்களால் வழங்கப்பட்ட ஆலய மணி கம்பீரமாக ஒலித்து கொண்டிருக்கிறது. வழிபாட்டை பொருத்தமட்டில் கரும்பு பந்தல் அமைத்து தேவ தந்தூமி ( உறுமி) வாங்கா முழக்கத்துடன் பாரம்பரிய தேவராட்டம் மற்றும் ஒயிலாட்டம் பழப் பெட்டி எடுத்து வந்து மாவிளக்கு மற்றும் கம்பம் புல்லுனால் செய்யப்பட்ட கொலுக்கட்டை வைத்து வழிபடுவது வழக்கம் இன்றளவும் எந்த மாற்றமும் இல்லாமல் சிறப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் கடைசி வெள்ளி சனி இரண்டு நாட்களிலும் மிக பெரிய அளவில் திருவிழா நடைபெறுவது வழக்கம் சிறப்பம்சம் என்னவென்றால் அனைத்து இன மக்களும் அனைத்து மதம் சார்ந்தவர் களும் சிறப்பாக வந்து வழிபட்டுச் செல்வது வழக்கம்.
வீர சக்கதேவி ஆலய வழிபாடு என்பது எப்பொழுது ஆரம்பிக்க பட்டது என்று தெரியவில்லை. ஆனால் அதே சமயத்தில் 57 தலைமுறைகளாக ஆலய வழிபாடு செய்து வருகின்றனர். என்பது தெரிகிறது.
இப்படிக்கு
அருள்மிகு வீர சக்கேதவி ஆலயக் கமிட்டி தலைவர்அரிமா மு. முருகபூபதி MJ F
பாஞ்சாலங்குறிச்சி