முத்தமிழாதிபன், இரட்டைவாளுக்கு அதிபதி பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் குலதெய்வமான வீரசக்க தேவி ஆலயம் கட்டபொம்மன் காலத்தில் சகலங்களை காக்கும் சகாதேவி என்றும், அதன் பிறகு காலபோக்கில் ஜக்க தேவி என்றும் சக்கம்மாள், சக்கதேவி பின்னர் வீர சக்கதேவி என்றும் இன்றளவும் அழைக்கப்பட்டு வருகிறது.
சகா என்றால் வாள் என்றும் அர்த்தம் கட்டபொம்மன் என்ற பெயரில் கூட கட்ட என்றால் வாள் என்றும் அர்த்தம். வீரத்தை பறைசாற்றும் வீதமாக வீரவாளை இன்றளவும் வழிபட்டு வருகின்றனர்.
இரட்டைவாளுக்கு அதிபதியான வீரபாண்டிய கட்டபொம்மன் இஷ்டம் தெய்வமான தமிழ் கடவுள் முருகனை பாஞ்சாலங்குறிச்சியில் இருந்து திருச்செந்தூர் வரை வழி நெடுக மணிமண்டபங்கள் அமைத்து திருச்செந்தூரில் முருகன் பூஜை நடக்கும் நேரத்தில் வழி நெடுக மணி ஒசை எழுப்பி பாஞ்சாலங்குறிச்சி முருகன் கோவிலில் வழிபடுவதை வழக்கமாக கொண் டிருந்தனர். ஆங்கிலேயர்களால் கோட்டை இடிக்கப்படும் போது முருகன் கோவிலும் இடிக்கப்பட்டது. இன்றளவு கூட முருகன் கோவில் இடிக்கப்பட்ட இடத்தில் எச்சங்களை காணலாம்.